கேரள மாநிலம், ஏற்றமானூர் சிவதலத்தில் பக்தர்கள் வயிற்றுவலி நீங்க விசேஷ பிரார்த்தனை செய்கின்றனர். ஒரு சமயம் அம்பலப்புழா மகாராஜாவுக்கு வயிற்றுநோய் வந்தபோது அவர் இங்கு வந்து வெண்கல நந்தி செய்து அதனுள் நெல்லை நிரப்பிவைத்து வணங்கி குணம் பெற்றாராம். அந்த நந்தி இன்றும் இங்குள்ளது. நந்தியின் உள்ளே இருந்து நெல்லை எடுத்துச் சாப்பிட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.