முனீஸ்வரர் கோயில் விழா பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2014 12:05
இளையான்குடி:சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இக்கோயிலில் மே 16 அன்று காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது . மே 22ல் பூத்தட்டு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து , விழாக்குழு தலைவர் தனசேகரன் தலைமையில் பக்தர்கள் பால்காவடி , ரதக்காவடி , பறவைக்காவடி , மயில்காவடி எடுத்து வந்தனர் .கோயில் முன் பூக்குழியில் இறங்கி நேர்த்தி செலுத்தினர் . பகல் 12 மணிக்கு அன்னதானம் , இரவு மகா உற்சவம் , கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி கருப்பத் தேவர் , தி.மு.க., சென்னை கே.கே.நகர் பகுதி செயலாளர் தனசேகரன் தலைமையில் , கோயில் நிர்வாகிகள் செய்தனர்.