பதிவு செய்த நாள்
24
மே
2014
12:05
வெள்ளக்கோவில் : மயில்ரங்கம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு, தீர்த்தம் செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. சங்கிலி கருப்பன் கோவிலில் இருந்து, முக்கிய வீதி வழியாக, மாரியம்மன் கோவிலை வலம் வந்தனர். பொன்ராஜ், 11, என்ற சிறுவன் பிரமாண்ட அலகு குத்தி வந்தார். பூபதி, சதீஷ் ஆகியோர், 22 அடி நீள வேலையும், தனலட்சுமி, 18 அடி நீள வேலையும் குத்தி வந்தனர். தொடர்ந்து, எருமைக்கிடா வெட்டுதல் மற்றும், கும்பம், கம்பம் எடுத்து கங்கை சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது.