காஞ்சிபுரம்: வைகுண்ட பெருமாள் கோயிலில் நேற்று கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் விழாவாக கருடசேவை உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.