விருதுருநகர் : விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று முடிகாணிக்கை மற்றும் பிரசாத ஸ்டால் பொது ஏலம் நடைபெற்ற நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு பேர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 2009ம் ஆண்டு வரையே டிசிஎஸ் கட்டப்பட்டிருப்பதாகவும், மேலும் அதுகுறித்த ஆவணங்கள் பெருமளவு மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம், அக்டோபர் மாதம் செலுத்த வேண்டிய தொகையை, மே மாதத்தில் தான் செலுத்தியுள்ளது. இதற்கு அபராதம் விதித்தால், நாளொன்றுக்கு ரூ. 200 வரை விதிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.