பதிவு செய்த நாள்
28
மே
2014
05:05
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் மாதந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை ஒரு நாள் நிறுத்தபடவுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு, பக்தர்கள் மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7 முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில், நாளை மாதந்திர பராமரிப்பு பணியில், மேல்தளம், கீழதளத்திலுள்ள, கம்பிவட கயிறு, உருளைகளில் ஆயில்கள், கிரிஸ் இட்டும், பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிநடக்கிறது. பின், ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட எடையளவு கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடக்கிறது. இதில், பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்ட பின், ரோப்கார், வழக்கம்போல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக, இயக்கபடவுள்ளதாக, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.