பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
02:06
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதிஅம்மன், ஸ்ரீ காளிஅம்மன், ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ அய்யனார் கோயில்கள் உள்ளது.சிதிலமடைந்த இந்த கோயிலின் திருப்பணிகள் முடிந் ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.4ம் கால பூஜை காலை முடிந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தன. தொடர்ந்து 10:20மணிக்கு மேலமங்கைநல்லூர் சாம்பசிவ சிவாச்சாரியார், கணபதிசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையிலானோர் ஸ்ரீதிரௌபதி அம்மன், காளி, பிடாரி, அய்யனார் சன்னதி விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். 10:30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் ராமதாஸ், சந்தானம், திருநாவுக்கரசு, அகோரம், நடனசிகாமணி, மணி, சங்கர் மற்றும் திருப்பணி கமிட்டியை சேர்ந்த சம்பந்தம், ராஜேந்திரன், இளங்கோவன், பழனிவேல், கலியபெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.பெரம்பூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.