பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
01:06
திருப்புத்தூர் : பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் அஷ்டமாசித்தி கோயிலில், பரிவார தெய்வங்கள் உள்ளிட்டவற்றிற்கு திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 1ம் தேதியன்று காலை 9 மணிக்கு,விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.3ல் முதலாம் காலயாகசாலை பூஜை, நேற்று காலை 2-ம் காலயாக சாலை பூஜை, மாலை 3-ம் காலயாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று, அதிகாலையில், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், காலை 7.40 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 8 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், பகல் ஒரு மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு, ஐம்பெருங்கடவுளர்கள் திருவீதி உலா நடைபெறும்.