ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு ராவணனுக்கு முக்தி அளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவானது வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி சன்னதியில் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.பின்னர் திருக்கோயிலிலிருந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராமர், ஸ்ரீ லெட்சுமணர், ஆஞ்சநேயர், சுக்ரிவன், சீதா தேவி ஆகியோர் தங்க கேடயத்திலும், ராவணன் மரக்கேடயத்திலும் புறப்பாடாகி 4 ரத வீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் திட்டக்குடி கார்னரில் ராவண சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.