புதுச்சேரி: பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில், வரும் 11ம் தேதி 1008 கலச அபிஷேகம் நடக்கின்றது. புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரத்தில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐயப்பன் எழுந்தருளிய பிரதிஷ்டாதினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நாளை (10ம் தேதி) மாலை 5:30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடக்கிறது. 11ம் தேதி காலை 10:00 மணிக்கு 1008 கலச அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளை, சபரிமலை பிரதான தந்திரி கண்டாரு மகேஷ்வரு நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை, புதுச்சேரி ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.