திருநள்ளார் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2014 03:06
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும்,வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்வேறு மாநிலத்திலிந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ரூ.6.50 லட்சம் மதிப்பில் நேற்று முன்தினம் கீழ வீதியில் உள்ள தேரடி விநாயகர் அலயத்தில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீரசாமி, கட்டளை கந்தசாமி தம்பிரான், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், உதவிப்பொறியாளர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.