பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
12:06
தூத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதையொட்டி, கோயில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. முருகன் அவதரித்த தினமான வைகாசி விசாகத்தில், திருச்செந்தூர் கோயிலில் திருவிழா நடக்கிறது. தினமும் காலை 5:00 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை, இன்று அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்படும். 1:30 க்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 2:30க்கு தீபாராதனையும், காலை 9:00க்கு உச்சிகால அபிஷேகமம், மாலை 4:00க்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை (ஜூன் 12) அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.விசாகத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வருவர். விவசாயிகள் விவசாய பொருட்களை தானமாக வழங்குவர். மேலும், விரதமிருந்து பாதயாத்திரையாக வருவோர் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்துாரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க, பஸ்கள், வாகனங்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்படுகிறது.