பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
12:06
பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில், வைகாசி வசந்தோத்சவவிழா ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாகநாதசுவாமி - சவுந்தர்யநாயகி அம்மன், இந்திரவிமானம், வெள்ளிநந்தீஸ்வரர், பூத, சிம்ம, யானை, ரிஷப, சேஷ,
காமதேனு வாச்கனங்களில் பகல், இரவு வீதியுலா வந்தனர்.நேற்று காலை 8.30 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடனும், சவுந்தர்யநாயகி அம்மன்தனித்தனியாக தேரில் வந்து அமர்ந்தனர். பின்னர் பூஜைகள்நடந்தது.காலை9 மணிக்குதேரடியில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் நான்குமாட வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் தேர்நிலையை அடைந்தது.பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரகிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு சேஷ, காமதேனுவாகனங்களில் வீதியுலா நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம்மகேந்திரன், நயினார்கோவில் பொறுப்பாளர்தெய்வச்சிலை ராமசாமி கலந்து கொண்டனர்.இன்று காலை 9 மணிக்கு தீர்த்தோத்சவமும்,இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள்வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 19ல்உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.