பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
02:06
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும், வைகாசி விசாகம் கோலாகலமாக, இன்று நடக்கிறது. வைகாசி மாதத்தில் சந்திரன், பவுர்ணமி நாளில், விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதம், "வைசாக மாதம் என்றிருந் து, பின்னாளில் "வைகாசி என்றானது. இந்த மாத பவுர்ணமி நாø ளயே, நாளிகையை கணக்கிட்டு, வைகாசி விசாகம் என அழைக்கிறோம். இந்நாளில் முருகப்பெருமான் அவதாரம் செய்ததால், முருகனின் பிறந்த நாளையே, வைகாசி விசாகமாக கொண்டாடுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், வைகாசி விசாக விழா, இன்று கோலகலமாக நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் கோவில்களிலும், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடக்கிறது. ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், அதிகாலை, 5.30 மணிக்கு க ணபதி ஹோமம் மற்றும் அபிஷே க, ஆராதனை நடக்கிறது. தொட ர்ந்து காலை, ஏழு முதல் மாலை, ஐந்து மணி வரை, லட்சார்ச்சனை நடக்கிறது. காலை, பத்து மணிக்கு படி பூஜையும், மாலை, ஐந்து மணிக்கு, பால்குடமும் நடக்கிறது. இதேபோல், கோபி அருகே, பவளமலை முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு, இன்று காலை, பத்து முதல், ஒரு மணி வரை, திருக்கல்யாண உற்சவம், பகல், ஒரு மணிக்கு மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன், பகல், 12 மணிக்கு சொற்பொழிவு ஆற்றுகிறார். இதேபோல் பிற முருகன் கோவில்களிலும் சிறப் பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.