செல்லியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு திருக்குடல் நன்னீராட்டு விழா !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2014 02:06
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயில் 14ம் ஆண்டு திருக்குடல் நன்னீராட்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புவனகிரி அடுத்த கீரப்பாளையம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயில் 14ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக எல்லையம்மன் கோயில் மண்ணாழியாளை வழிபட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தெதாடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 14ந் தேதி வரை நடக்கும் விழாவில் தினசரி காலை அருகில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு பக்தர்களுடன் சென்று புனித நீருடன் சக்தி கரகம் அங்கரிக்கப்பட்டு வீதியுலா காட்சி நடைபெறும். விழா காலங்களில் கோயில் முன்பு வில்லுபாட்டு, பேராசிரயர் அறிவொளி தலைமையில் குடும்ப முன்னேற்றத்திற்கு துணை புரிவது அன்பு நிறைந்த மனைவியா, அறிவு நிறைந்த பிள்ளைகளா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. 4ம் நாளில் அதிகாலை கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும், முற்பகல் சாக்கை வார்த்தல் நிகழ்சியும், இறுதி நாளான 5ம் நாளில் மஞ்சல் நீர் விளையாட்டு நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் நாட்டாண்மைகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.