குருபெயர்ச்சி விழா: தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2014 01:06
பாகூர்: பாகூர் தட்சணாமூர்த்தி சுவாமி கோவிலில், நாளை (13ம் தேதி) குருபெயர்ச்சி விழா நடக்கிறது. பாகூர் பங்களா வீதியில் பழமைவாய்ந்த தட்சணாமூர்த்தி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கிழக்கு திசை பார்த்து அமர்ந்த நிலையில் சுவாமி தட்சணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு பால், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, நாளை (13ம் தேதி) குருபெயர்ச்சி விழா நடக்கிறது. காலை 9.30 மணிக்கு பரிகார ஹோமம் நடக்கிறது. மாலை 5.57 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பிரவேசம் செய்கிறார். இதனையொட்டி பரிகார அர்ச்சனைகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.