பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
01:06
வைகாசி விசாகத்தை ஒட்டி, நேற்று குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. வல்லக்கோட்டை, திருப்போரூர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காஞ்சி குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வள்ளி, ய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி ராஜ வீதிகளில் வலம் வந்தார். 10ம் திருநாளான நேற்று காலை, 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனான சுப்ரமணியர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.
முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு கேடயம் மங்களகிரி வாகனத்தில் முருகன் வீதிவுலா வந்தார். வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று, காலை, 10:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேடய வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, வஜ்ஜிர குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சியில், புனித நீராடினர். வைகாசி விசாக விழா வைகாசி விசாகத்தையொட்டி, திருப்போரூர் கோவிலில் கந்தசுவாமி உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அர்ச்சனையும், தீப து?ப ஆராதனையும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கந்தனை வழிபட்டனர். திருப்போரூர் சிதம்பர சுவாமி மடத்தில் 355வது குரு பூஜை சிறப்பு வழிபாடும் நடந்தது.