திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே அருகே ஜாம்பவன் ஓடை ஆண்டவர் தர்காவில் கருர் தொகுதி அ.தி.மு.க., எம்.பி., தியானம் செய்தார். திரு வாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு விசேஷ தினங்களி ல் அதிகளவில் முஸ்லீம் மற்றும் இந்துக்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த தர்காவில் நேற்று பகல் 12 மணிக்கு கருர் தொகுதி அ.தி.மு.க., எம்.பி தம்பிதுரை வந்தார். தர்கா டிரஸ்ட்டிகள் தமீம் அன்சாரிபாக்கர் அலிதலை ø ம யிலான இஸ்லாமியர்கள் வரவேற்று பள்ளி வாசலுக்கு அழைத்து சென்று சிறப்புத்தொழுகை நடத்தினர். அதன் பின் அங்குள்ள ஆண்டர் கால்மடியில் அரைமணி நேரம் ஆழ்ந்த தி யானம் செய்தார். அருடன் நாகை தொகுதி அ.தி.மு.க., எம்.பி., டாக்டர் கோபால் உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் பலர் பங்கேற்றனர்.