கோவை : புலியகுளம் புனித அந்தோணியார் தேர்திருவீதி உலா நேற்று மாலைவிமர்சியாக நடந்தது. கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்தார். புலியகுளம் சர்ச் அருட்தந்தை ஜார்ஜ் தனசேகர், உதவி அருட்தந்தை இன்னாசி முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று மாலை தேர்திருவீதி உலா நிகழ்ச்சியில் புனித அந்தோணியர், குழந்தை இயேசு, வேளாங்கண்ணி மாதா, காணிக்கை மாதா உள்ளிட்ட 14 வகை தேர்கள் புலியகுளம், ரெட்பீல்ட்ஸ் பகுதிகள் வழியாக மீண்டும் சர்ச் வளாகத்தை வந்தடைந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.