பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
02:06
எல்லா தெய்வங்களும் நோய் நீக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இன்ன தெய்வங்களை வழிபட வேண்டுமே என சுதமா முனிவர் சிவ புராணத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதன்படி அதற்குரிய தெய்வங்களை அந்தந்த கிழமைகளில் வழிபட்டால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதீகம்.
அம்மை நோய்: மாரியம்மன்- ஞாயிற்றுக்கிழமை.
வயிறு சம்பந்தமான நோய்கள்: தட்சிணாமூர்த்தி, முருகன்- வியாழன், செவ்வாய்.
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள்: மகா விஷ்ணு- சனிக்கிழமை.
ஆயுள், ஆரோக்கியம்: ருத்திரர்- திங்கட்கிழமை.
எலும்பு சம்பந்தமான நோய்கள்: சிவபெருமான், முருகன் -திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை.
கண் சம்பந்தமான கோளாறுகள்: சிவபெருமான், முருகன், பிள்ளையார்- திங்கள், செவ்வாய், புதன்.
காது மூக்கு தொண்டை நோய்கள்: முருகன்- செவ்வாய்
சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள்: சங்கர நாராயணர்- வெள்ளிக்கிழமை.
தலைவலி, ஜுரம்: ஜுரஹரேஸ்வரர், பிள்ளையார்-திங்கள், புதன்கிழமை.
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு: முருகன்- செவ்வாய்.
பெண்களுக்கான மாதப் பிரச்னைகள்: ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீரங்கநாதர்-ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமை.
பித்தப்பைக் கோளாறுகள்: முருகன்- செவ்வாய்.
புற்றுநோய்: சிவபெருமான்- திங்கட்கிழமை.
மாரடைப்பு, இதயக் கோளாறுகள்: துர்க்கை, சக்தி, கருமாரி, இதயாலீஸ்வரர்- திங்கள், ஞாயிற்றுக்கிழமை ராகு காலம்.
ரத்த சோகை, உயர் மற்றும் குறை ரத்த அழுத்தம்: முருகன்- செவ்வாய்க்கிழமை.
வாதக் கோளாறுகள்: சனி பகவான், சிவபெருமான்- சனிக்கிழமை ராகு காலம்.
வாயுக் கோளாறுகள்: ஆஞ்சனேயர்- சனிக்கிழதம.
தெய்வவழிபாட்டுடன், உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்து நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்தால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. அளவான உணவு, நிறைவான தியானம், சுயநலமில்லாத பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் ஆனந்தமாக வாழலாம்!