இயல்பான குணத்திலேயே, பசு மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுகிறது. சாதுவான பசு, தன் ரத்தத்தை பிறருக்குப் பாலாகத் தருகிறது. எருமையும் பால் தருகிறது என்றாலும், அதில் கொழுப்பு அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால் தான், பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப் பாலுக்கு இணையாக பசும்பாலைத் தருகிறார்கள். கோமாதா என போற்றப்படும் பசு அசுத்தமான இடத்தில் வாசம் செய்யாது. தெய்வாம்சம் கொண்ட அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதால் கோபூஜை செய்கிறோம்.