காரைக்கால்: கீழகாசாக்குடி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் ÷ காவில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை தீக்குழி புண்ணியாதானம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சீதளாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக தீக்குழி எதிரே சிறப்பு அலங்காரத்தில் சீதளாதேவி அம்மன் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.விழாவில் எம்.எல்.ஏ., திருமுருகன், முன்னால் எம்.எல்.ஏ.,ஒமலிங்கம் மற்றும் கோவில் அற ங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.