சீந்திரம் கோயில் கோபுரம் புனரமைப்பு; ரூ. ஒன்றே கால் கோடி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2014 12:06
நாகர்கோவில், : சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ராஜகோபுரத்தை புனரமைக்க அரசு ஓன்றே கால் கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் ஒரே லிங்கத்தில் அருள்பாலிக்கும் கோயில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இந்த கோயில் முகப்பில் 133 அடி உயரத்தில் ஏழு அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் உட்பகுதியில் ராமாயணம், மகாபாரதம் கதைகள் மூலிகைகளில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து தொல்பொருள்துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் வீரராகவன் தலைமையில் ஒரு கமிட்டியினர் இங்கு ஆய்வு நடத்தினர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் இந்த கோபுரத்தை புனரமைக்க ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ராஜகோபுரத்தில் உள்ள பச்சிலை ஓவியங்கள் 81 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். 33 லட்சம் ரூபாய் செலவில் கோபுரத்தில் உள்ள கீறல்கள் சரிசெய்யப்பட்டு வண்ணம் பூசப்படும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.