திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் நித்யானந்தகிரி சுவாமிகள் அன்னதானம் செய்துவைத்தார். திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் நேற்று சிறப்பு அன்னதானம் நடந்தது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நித்யானந்தகிரிசுவாமிகள் அன்னதானத்தை துவக்கிவைத்தார். சத்சங்க மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை சென்னை கிருஷ் ணசாமி, மாலதி செய்தனர். மாணவர்களுக்கு ஒழுக்க நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிகேதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.