ஜோதிர் மலை இறைபணி திருக்கூட்ட கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2014 06:06
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜோதிர் மலை இறைபணி திருக்கூட்டம் சார்பிர் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் திருவடிக்குடில் சுவாமிகள் பேசுகையில். பவுண்டரிகபுரம் சோமநாத சுவாமி கோயிலை மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி திருப்பணி செய்ய வேண்டும். திருநாவுக்கரசு நாய னர் குருபூஜை தினமான சித்திரை சதயம் நாளை பழந்திருக்கோயில் தினமாக, அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். புனித்தலமான கும்பகோணம் நகருக்குள் பெருகியுள்ள மது, மாமிச விற்ப னையை தடுத்து நகரின் புனிதத்தையும், தூய்மையையும் காத்திட வேண்டும். இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் மாதம் ஒரு முறையாவது அதிகாரிகள், பொது மக்களை சந்தித்து கோயில்களின் நிலை, வழிபாடு குறித்து கலந்தாய்வு செய்ய வேண்டும். உள்ளூர் வழிபாட்டு மன்றங்கள்,குழுக்கள் விழா மற்றும் பூஜைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்.அவர்களை அதிகாரிகள் கண்காணிக்கலாம். வாழ்க்கை நெறிகளை போதிக்கும் சமயவழிபாட்டு தலங்களை பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாத்து வழிபட்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார்.