குன்னூர் : குன்னூர் ரேலியா அணை பகுதியில் கிடாவெட்டி பூஜை நடத்தப்பட்டது. குன்னூரில் பருவ மழை பெய்யாத நிலையில், தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை பெய்ய வேண்டி, நகர மன்றம் சார்பில் கிடாவெட்டி பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் மணி(பொ), கமிஷனர் ஜான்சன் உட்பட நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாலையில், அணை பகுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.