பதிவு செய்த நாள்
25
ஜூன்
2014
11:06
காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமிகோவில் கும்பாபிஷேகம், ஜூலை4ம் தேதி நடக்கிறது. இதற்கானஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.திருப்பூர் மாவட்டம், காங்கயம்,சிவன்மலை சுப்ரமணிய சுவாமிகோவிலில், புதிய ராஜகோபுரம்,விமானங்கள் புதுப்பித்தல் உள்ளிட்டபல்வேறு திருப்பணி நான்குகோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வரும்ஜூலை 4ம் தேதி நடக்கிறது. இதற்காக யாகசாலை அமைத்தல், க்யூகட்டுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள்தீவிரமாக நடந்து வருகின்றன.யாகசாலையில், 21 வேதிகை, 48குண்டங்களும், ஐந்து பிரதானவேதிகையும், 16 பரிவாரவேதிகைகளுடன் பெரிய அளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.வரும், 29ம் தேதி இரவு 8.00மணிக்கு, கிராம தெய்வ சாந்தி வழிபாடு, 30ம் தேதி காலை 6.00மணிக்கு, மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, இறைஅனுமதி பெறுதல், திருமகள் வழிபாடு, மாலை 6.00 மணிக்கு சுத்தபுண்யாக வாசனை நடக்கிறது.அடுத்த மாதம் 1ம் தேதி காலை8.00 மணிக்கு அந்தணர் வழிபாடு,10.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகம் மற்றும்
மாலை 4.30 மணிக்கு புனித மண்எடுத்தல் நடக்கிறது. 2ம் தேதி,காலை 9.00 மணிக்கு சூரிய ஒளிபெறுதல், கங்கை புனித நீர்கொண்டு வருதல், மாலை 5.00மணிக்கு, முதல் கால யாக பூஜைதுவக்கம், அருள் சக்திகளை திருக்குடத்தில் எழுந்தருளல் மற்றும் மகாதீபாராதனை நடக்கிறது.வரும் 3ம் தேதி காலை 8.30மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, மூலிகை யாகம், வேள்விமண்டப வழிபாடும், மாலை 5.00மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், இரவு 7.00 மணிக்கு, மூலாலயமூர்த்திக்கு எண்வகை மருந்து சாற்றுதல்நிகழ்ச்சியும் நடக்கிறது. 4ம் தேதி
காலை 4.30 மணிக்கு, நான்காம் காலயாக பூஜை, திருமறை, திருமுறைவிண்ணப்பம், பரிவார தெய்வங்களுக்கு யாக பூஜை துவங்குகின்றன.கும்பாபிஷேகத்தன்று காலை 5.45மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பரிவார விமானம் மற்றும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்,ராஜகோபுரம் மற்றும் மூலவர்விமானங்களுக்கு கும்பாபிஷேகம்நடக்கிறது. அதன்பின், தச தானம்,தச தரிசனம், பெருஞ்சாந்தி நீராட்டுநடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம்,சுவாமி வீதி உலா ஆகியன நடக்கிறது.யாகசாலை பூஜை நேரங்களில்,திருமறை, சிவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்யப்படும். அடிவாரத்திலுள்ள மூன்று மண்டபங்களில் காலை 9.00 மணி முதல்அன்னதானம் நடக்கிறது. மேலும்,மழை பொழியவும், விவசாயம்செழிக்கவும், தொழில் வளர்ச்சி, மக்கள்நலன் பெற வேண்டி, 1ம் தேதிமாலை 3.00 மணிக்கு, காங்கயம்,பகவதி அம்மன் கோவில்அருகிலிருந்து, புனித தீர்த்தம்மற்றும் 3 ஆயிரம் முளைப்பாலிகைஊர்வலம் நடக்கிறது.இதில், 18 வகை வாத்தியங்களும்,யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா ஊர்வலம்துவங்கி, சிவன்மலை கோவிலுக்குவருகிறது. கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்ட ர் மூலம் பூக்கள்தூவி, புனித நீர் தெளிக்கவும், பக்தர்கள் மலைக்கு வருவதற்கு சிறப்புபஸ்களும், கும்பாபிஷேகத்தைகாண சிறப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டு வருகின்றன.