பதிவு செய்த நாள்
26
ஜூன்
2014
12:06
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், ரூ. 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. இதில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக, 20 கிராம், தங்கமும், 83 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். பேரூர் பட்டீஸ்வர கோவில் உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில், பிரதான உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில், ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 282 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியல் திறக்கப்பட்டதில், ரூ. 15 ஆயிரத்து 441 ரூபாயும், திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டதில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 473 ரூபாய் உட்பட, 5 லட்சத்து 76 ஆயிரத்து 196 ரூபாய் வசூலாகியிருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின், திருப்பூர் மாவட்டஉதவி கமிஷனர் ஆனந்த் தலைமையில், காணிக்கை எண்ணப்பட்டது. மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக 20 கிராம் தங்கமும், 83 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். அப்போது, பேரூர் கோவில் உதவிகமிஷனர் அனிதா (பொறுப்பு), ஆய்வாளர் கவுதம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.