பதிவு செய்த நாள்
28
ஜூன்
2014
12:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 30ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது.நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் 30ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. காலை 9 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், சூக்த சுதர்சன ஹோமங்கள், அகல்மஷ ஹோமம், ரக்சா பந்தனம், மகா சாந்தி ஹோமம். மாலை 5 மணிக்கு அங்குரார்பணம், திவ்ய பிரபந்த தொடக்கம், அக்னிப்ரதிஷடை, கலாகர்ஷணம், பரிவார கும்பார்சனம், ததுக்த ஹோமங்கள் நடக்கிறது. ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ஹோமங்கள் நடக்கிறது. கும்பாபிஷேக தினத்தன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், சகஸ்ரஹனாதி பாரமாத்மிக ஹோமம், யத்தேவாதி ஹோமம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடாகி 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 10 மணிக்கு பிரம்மகோஷம், வேத திவ்ய ப்ரபந்த இதிகாச புராணாதிகள் சாற்றுமறை, 1 மணிக்கு பெருமாள் சர்வ தரிசனம், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.