பதிவு செய்த நாள்
28
ஜூன்
2014
12:06
மானாமதுரை:மானாமதுரை, இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், 120ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இங்கு, உலகபிரசித்தி பெற்ற, திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், ரூ.8 லட்சம் செலவில், கொடி மரம் புதுப்பிக்கப்பட்டன. ஆலயத்தின் 120வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் விழா நடைபெறும். சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா முன்னிலையில், ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஜூலை 4ம் தேதி திருஇருதய பெருவிழா, 5-ல் நற்கருணை விழாவும் நடைபெறும். விழா ஏற்பாட்டை ஆலய பங்கு தந்தைசாமிநாதன் தலைமையில், சமூக முன்னேற்ற சங்கம்,செல்ஸ் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.