பதிவு செய்த நாள்
03
ஜூலை
2014
11:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஊஞ்சல் முப்பழ பூஜை திருவிழா நேற்று துவங்கியது. கோயிலில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து, திருவாட்சி மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருள 30 நிமிடங்கள் ஊஞ்சலாட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சி ஜூலை 10 வரை நடக்கும். ஜூலை 11ல் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா, பலா, வாழை ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.