பதிவு செய்த நாள்
03
ஜூலை
2014
11:07
தஞ்சாவூர்: மகா வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி விழா, கடந்த 27ம் தேதி துவங்கியது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் உள்ள மகா வராகி அம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதன்படி, 12வது ஆண்டு விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. ஜூலை, 7ம் தேதி வரை, 11 நாட்களுக்கு பல்வேறு அலங்காரம் நடக்கிறது. இதில், 27ம் தேதி வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், 28ம் தேதி மஞ்சள் அலங் காரம், 29ம் தேதி குங்கும அலங்காரம், 30ம் தேதி சந்தன அலங்காரம் செய்யப்பட்டது.. ஜூலை, 1ம் தேதி தேங்காய்பூ அலங்காரத்திலும், நேற்று மாதுளை அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தார். இன்று நவதான்ய அலங்காரம், 4ம் தேதி வெண்ணை அலங்காரம், 5ம் தேதி கனி வகை அலங்காரம், 6ம் தேதி காய்கறி அலங்காரம், 7ம் தேதி புஷ்ப அலங்காரம் நடக்கும். அன்றைய தினம் இரவு பூச்செரிதல் நிகழ்ச்சி, அம்மன் திருவீதியுலா நடக்கிறது. மேலும், நவராத்திரி தினத்தையொட்டி, தினம்தோறும் காலை, 8 முதல், 10 மணி வரை சிறப்பு வராகி ஹோமம், அதன் பின், சிறப்பு அபிஷேக தீபாராதனை, மாலை, 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. நேற்று பஞ்சமி தினத்தை யொட்டி, வராகி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம், 1,000 பேருக்கு சிறப்பு நைவேத்ய பிராசாதம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆஷாட நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.