விருதுநகர் வெங்கடாஜலபதி கோயிலில் குடமுழுக்கு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2014 11:07
விருதுநகர்: விருதுநகர் ராமர் ஆலய வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார்,
வெங்கடாஜலபதி கோயிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர்
ரயில்வே பீடர் சாலையில் ராமர் கோயில் வளாகத்தில் திருமலையில் இருப்பது
போன்ற பத்மாவதி தாயார் சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கு புதன்கிழமை முதல் யாக பூஜை தொடங்கியது.
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஐந்தாம் யாக பூஜையும்
நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி முதல் 10.25 மணிக்குள் இக்கோயில்
குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் தங்க கவசத்தில்
வெங்கடாஜலபதிஅருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.