பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
வாஸ்து சாஸ்திரத்தில் பூமி 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதம் வீதம் 12 மாதங்களை நிர்ணயம் செய்து, மாதம் ஒரு ராசியில் படுக்கை நிலையில் வாஸ்து பகவான் சஞ்சரிக்கிறார். எனவே, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் பணிகளைத் தொடங்கும் மாதத்தில், வாஸ்து தேவனின் சஞ்சார நிலை என்னவென்று பார்க்க வேண்டும். ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து புருஷன் தூக்கத்தில் இருந்து எழுகிறார். அந்த நேரத்தில் வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல் போன்ற பணிகளைத் தொடங்கினால் நன்மை உண்டாகும். பணி தடையின்றி நடைபெறும். கட்டிடத்தில் வாழ்பவர்களின் வாழ்வு செழிக்கும்.
வாஸ்து தேவன் விழித்திருக்கும் நேரங்கள்...
சித்திரை: 10ம் தேதி காலை 8 - 9.30 மணி வரை
வைகாசி: 21ம் தேதி காலை 9. 04 -10. 34 மணிவரை
ஆடி: 11ம் தேதி காலை 8. 02 - 9. 32 மணி வரை
ஆவணி: 6ம் தேதி மதியம் 2.24 - 3.54 மணி வரை
ஐப்பசி: 11ம் தேதி காலை 6.50 - 8.20 மணி வரை
கார்த்திகை: 8ம் தேதி காலை 10. 11 - 11. 41 மணி வரை
தை: 12ம் தேதி காலை 9. 47 - 11. 47 மணி வரை
மாசி: 22ம் தேதி காலை 9. 38 - 11. 08 மணி வரை