காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கங்கைக்கு நிகரான தீர்த்தத்தில் நீராடினாலும், கங்கை நதியில் நீராடிய முழுப்பலன் கிட்டும் என்று ஞான நுõல்கள் கூறுகின்றன. கங்கை என்று சொன்னாலும், அதன் பெருமையைக் கேட்டாலும், கங்கையில் நீராடியவர்களை தரிசித்தாலும், கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வாஞ்சியம் திருத்தலத்திலுள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.