கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூர் திரவுபதையம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூர் கிராமத்தில் தீமிதி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. தினம் காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள், இரவில் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 9 மணிக்கு பாக்கம் ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, காலை 10 மணிக்கு படுகளம் அமைத்தலும், பகல் 12 மணிக்கு தீமிதி திரு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சொரப்பூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.