தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஆஞ்சநேயர்சிலை பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2014 12:07
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய 77 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை விழா, கும்பாபிஷேகம் நடந்தது. தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், தெய்வச்செயல்புரத்தில் உலக அமைதி வேண்டி 77 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பீடத்தில் ஆஞ்சநேயர் ஆலயமும். எதிரில் ராமர் கோயிலும், ராஜராஜேஸ்வரி ஆலயமும் உள்ளது. நேற்று காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தினை பட்டர்கள் கணேஷ்சர்மா, கோவிந்தன் நடத்தினர். கோபுரத்தில் கலச நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.