மயிலம்: மயிலம் ஜெ.ஜெ. நகரிலுள்ள பூவிழி முத்து மாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை அலங்கரித்து, முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு கோவில் வளா கத்தை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.