பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
11:07
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 108 அம்மன் கோவில் சுற்றுலா, ஒரு நாள் சக்தி சுற்றுலா, ஆடி அமாவாசை சுற்றுலா என, மூன்று வகை சுற்றுலா திட்டத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது.இதில், 108 அம்மன் கோவில் சுற்றுலா, ஆடி மாதம் திங்கள் மற்றும் வியாழக்கிழமை, காலை, 6:00 மணிக்கு, சென்னை யில் இருந்து புறப்பட்டு, வெள்ளி மற்றும் திங்கள், இரவு, 9:00 மணிக்கு, சென்னை வந்தடையும்.சுற்றுலா கட்டணம் நபருக்கு, 4,950 ரூபாய் (இருவர் தங்கும் வசதியுடன்), சிறுவருக்கு, 4,350 ரூபாய் (4 முதல் 10 வயது), தனி அறை வசதியுடன், நபருக்கு, 5,950 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம், பஸ் மற்றும் தங்கும் வசதிக்கு மட்டும்.ஒரு நாள் சுற்றுலாவாக, மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவெற்றியூர் ஆகிய ஊர்களில் உள்ள, அம்மன் கோவில்களை தரிசிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தவிர, மூன்று நாட்கள், ஆடி அமாவாசை சுற்றுலாவில், சென்னையில் இருந்து, வரும், 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பஸ் புறப்படும். திருபுலானி, தேவிப்பட்டினம், ராமர்பாதம், அனுமன் பாதம், அக்னி தீர்த்தம் முடித்து, 27ம் தேதி சென்னை வந்தடையும்.இதற்கு நபர் ஒருவருக்கு, 2,800 ரூபாய் கட்டணம். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளரை, 044-2538 4444, 2538 3333, 2538 9857, ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.