பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
சென்னை:ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அரக்கோணம் - திருத்தணி இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.திருத்தணி முருகன் கோவிலில் வரும், 21ம் தேதி, ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, அரக்கோணம் - திருத்தணி இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.காலை, 10:30, மதியம், 1:10 மற்றும் 2:45 ஆகிய நேரங்களில், அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு, திருத்தணியை அடையும் வகையிலும், காலை, 11:00, மதியம், 1:35, 3:15 ஆகிய நேரங்களில், திருத்தணியில் இருந்து, அரக்கோணத்திற்கு திரும்பும் வகையிலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.