துறையூர்: துறையூர் ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், பவுர்ணமி பூஜை, புத்தகம், இசை தகடு வெளியீடு நடந்தது. சன்மார்க்க சங்க நிறுவனர் அரங்கமகா தேசிக சுவாமிகள் தலைமையில், பருவ மழை வேண்டி, ஞானிகளுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அரங்க மகாதேசிகர் எழுதிய தியான சூட்சம ஆசி நூல் மற்றும் அவரது அருளுரை நூல்கள், இசை தகடு வெளியிடப்பட்டது. பல்சுவை இசை கலைஞர் ஜீவா, ராகாஸ் இசை குழுவினர், திருச்சி அபிநயா நடனப்பள்ளி இணைந்து நடத்திய, "பாட்டும், பாதமும் என்ற இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.