பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
தஞ்சாவூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும், 25, 26 ஆகிய தேதிகளில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ராமேஸ்வரம், பூம்புகார், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பூம்புகார், கோடியக்கரை, அய்யாவாடி, அனந்தமங்கலம், திருவையாறு ஆகிய கடற்கரை பகுதிகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிகின்றனர். அவர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து பூம்புகாருக்கு சிறப்பு பஸ் வசதி செய்துள்ளது. வேதாரண்யம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், மன்னார்குடி ஆகிய பகுதிகளிலிருந்து கோடியக்கரைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலிருந்து ராமேஸ்வரத்துக்கும், மயிலாடுதுறை, பொறையார் பகுதிகளிலிருந்து அனந்தமங்கலத்துக்கும், கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கும் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும், 25, 26 ஆகிய இரண்டு நாட்களும், 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.