குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா: ஜூலை 19ல் துவங்குகிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 12:07
தேனி : குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித திருவிழா ஜூலை 19ல் துவங்குகிறது. குச்சனூரில் சுரபி நதிக்கரையில் சுயம்புவாகக் சனீஸ்வர பகவான் கோயில் கொண்டுள்ளார். ஜூலை 19ல் காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடித் திருவிழா துவங்குகிறது. இம் மாதம் 26ல் இரண்டாவது சனிக்கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக., 1ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆக.,16 ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. போலீஸ், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு பஸ்கள், குடிநீர், சுகாதாரம், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.