Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயில்லாமல் நாமில்லை! 12 சங்கராந்திகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலன் தரும் பரிகாரங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
03:07

ஜாதக ரீதியா பெண் சாபம் இருந்தா எப்படியெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் எங்க குடும்பத்துல இருக்கு. அதுக்கான பரிகாரங்களைச் சொல்லாம, விஷயத்தை மட்டுமே சொல்றீங்களேனு கேட்டாங்க ஒரு அம்மா. கேள்வி நியாயம்தான். சாபத்தோட தன்மை, அதோட வலிமை தெரிஞ்சுதான் பரிகாரம் செய்யணும். அதுக்கு ஜாதகத்தைப் பார்க்கணும். அடுத்து பிரஸ்னம் பார்க்கணும். அதைப் பார்க்காம பரிகாரம் சொல்ல முடியாதே. ஜுரம்னு சொல்றோம். அப்புறம் ஃடைபாய்டு, நிமோனியா, மலேரியானு என்னென்னமோ வகையா பிரியறது இல்லியா? எல்லாத்துக்கும் ஒரே மாதிரி மருத்துவம் கிடையாதே. அதுபோலத்தான் இதுவும்.

சில விஷயங்களைச் சொல்ல வருத்தமாத்தான் இருக்கு. செப்டம்பருக்கு மேல கடன்லாம் தீர்ந்துடும். வருமானம் பெருகும்னு ஒருத்தர் சொன்னதை நம்பி பரிகாரம் செய்த ஒருத்தர், சமீபத்துல வந்து வருத்தப்பட்டார். அவர் ஜாதகத்தைப் பார்த்தா ப்ரேத சாபம் வலிமையா இருக்கு. இதை, எப்படி கண்டுபிடிக்கறது? மாந்தியை வைச்சு இதைக் கணிக்கணும். உதாரணமா2-ல மாந்தி இருந்தா, கண்டிப்பா குடும்ப தோஷம் உண்டு. அதுக்கு குடும்பதோஷ  பரிகாரம் செய்துதான் ஆகணும். 3ல இருந்தா சகோதர வகைல தோஷம். இப்படி ஒவ்வொரு இடத்தை வைத்தும் கணிக்கணும்.

இது மட்டும் இல்ல; மாந்தியோடு யார் சேர்ந்து இருக்காங்கன்னு பார்த்தும் கணிக்கணும். சூரியனோட சேர்ந்து இருந்தா பிதுர் வகைல, சந்திரனோட சேர்ந்திருந்தா அம்மா வகைல... சரி; இது எதனால ஏற்படறது?

அழுதபடியே மரணம்... அழுதல்னா, துக்கம், மனவேதனை, ஏமாற்றம் இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கணும். இது ஒரு வகை. அப்பாவோ அம்மாவோ காலமாயிட்டாங்க. பையனோ பெண்ணோ வெளி நாட்டு இருக்காங்க. வந்துசேர இரண்டு நாள் ஆறது. ஆத்மா வெளிலயும், உடம்பு ஐஸ் பெட்டிலயுமா காத்திருக்கு இல்லியா? இதனாலு<ம் வரும்.

அப்பா, அம்மாவை மரியாதையில்லாம பேசறது, தூற்றுவது அடுத்தவர் சொத்து, மனைவி இதற்கு ஆசைப்படுவது அல்லது அடைவது.... இதெல்லாம் இப்படித்தான் விளையும். இது மட்டுமில்ல; செவ்வாய், சனி, மாந்தி சேர்ந்திருந்தாலும் பிரேத சாபம் உண்டு. இதுக்கு என்ன பண்றது?

பன்னிரண்டு வகைப் பழங்களால- அன்னாசி, ஆப்பிள், திராட்சை... இப்படி - சுவாமிக்கும் அம்பாளுக்கும் பழக்காப்பு சாத்தணும். அபிஷேகம். ஆராதனைனு விமர்சையா செய்யணும்.  வளர்பிறை பிரதோஷம் அன்னிக்கும், அமாவாசை அன்னிக்கும் இதைச் செய்யலாம். புடலங்காய் கலந்த சாதத்தை நிவேதிக்கணும். இது ஓரளவு நல்ல பலனைத் தரும்.

ஆனா, பிரச்னம் பார்த்துத்தான் சாபத்தோட கடுமை தெரிஞ்சு பரிகாரம் செய்யணும். அதை மறந்துட வேண்டாம்.

சின்னச்சின்ன விஷயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தினா, இவ்வளவு கஷ்டம் இல்லாம பார்த்துக்கலாம். உதாரணமா, வீட்டுக்கு வரவங்களுக்கு வெத்திலை, பாக்கு, பழம் தரது ரொம்ப மங்கலமான விஷயம். அதோட மஞ்சளும், குங்குமமும் சேர்த்துத் தரலாம். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, அமாவாசைதோறும் ஒருத்தருக்கு சாப்பாடு போடறது... இதெல்லாம் சாபம் இல்லேன்னாலும், நம்மை சந்தோஷப்படுத்தும் காரியம்.

அடுத்து, சின்னதா மூணு விஷயம்: வர 7.4.2014 அசோகாஷ்டமி. இந்த நாள்ல மருதாணி மரத்துக்கு ஜலம் விட்டு, அதை மூணு தடவை வலம் வந்தா நோய் பிடுங்கல் குறையும். பவானி உத்பத்தியும் இதே நாள்லதான். பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய, இந்த நாள்ல பவானி அஷ்டோத்திரம் சொல்லி, அம்பாளை அர்ச்சித்து வழிபட்டா நல்ல பலனுண்டு சொன்னது மகா பெரியவா. தீர்க்க சுமங்கலித்வம் வாய்க்கும்னு சொல்றது காசி காண்டம்.

அப்புறம் 14.4.2014 அன்னிக்கு விஷுக்கனி. முதல் நாள் ராத்திரி பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பணம், கண்ணாடி இதெல்லாம் சுவாமி படத்துக்கு முன்னால வைச்சுட, மறுநாள் எழுந்ததும் முதல்ல அதைப் பார்த்தா, இந்த வருஷம் சுபிட்சமா அமையும்.

சமீபத்துல 90 வயசுப் பெரியவர் சாஸ்திரிகள் ஒருத்தரைப் பார்த்தேன் அவர் சொன்ன விஷயம் இது:

எல்லாரும் காசு காசுன்னுதான் தேடறா. காசும் வரது. ஆனா, தங்கத்தான் இல்லைன்னு சொல்றா. தினம் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு விளக்கு ஏத்தட்டும். கிழக்கு பார்த்துத்தான் ஏத்தணும். அந்த விளக்குல ஒரு காசு போடணும். 1 ரூபாய் நாணயமா, 2 ரூபாயா, 5 ரூபாயா, தங்கக் காசா, வெள்ளிக் காசா... இதெல்லாம் அவங்க சவுகர்யம். அந்த விளக்குக்கு சந்தனம் குங்குமம் வைச்சு, பூவும் வைச்சு இப்படி ஏத்திட்டு வந்தா, காசு வரும்; வீட்லயும் தங்கும். என்னோட பால்யத்துல எங்க அப்பா சொல்லி, பலரும் செஞ்சு பலனடைஞ்ச விஷயம் இது.

இப்ப எல்லாருக்கும் தேவையான விஷயமும்கூட. திக்கு வாய் சீர்ப்பட, ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட சில விஷயங்கள் இருக்கு. அதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar