சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ய ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.