Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விபரீத கற்பனைகள்! ஜீவன் முக்தர் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இப்போதே ராஜயோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
04:07

ராமாயணமும், மகாபாரதமும் பாரதத்தின் இரு கண்களாக போற்றப்படுகின்றன. இதில் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படும் மகாபாரதம், ‘மண்ணாசை கூடாது’ என்பதை வலியுறுத்துகிறது. மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்தில் முடிந்த சமயத்தில், பிதாமகரான பீஷ்மர் அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்தார். அப்போது கிருஷ்ணர், பாண்டவர்களை அவரிடம் அழைத்துச் சென்று, <உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்க வேண்டினார். பீஷ்மரும் அதை  ஏற்றுக் கொண்டார். “ நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழு நம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல சவுபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாக கிடைக்கும்” என்று பீஷ்மர் உபதேசித்தார். அப்போது, இன்னொரு சுலபமான வழியையும் அவர்களுக்குக் கூறினார். “யார் ஒருவர் தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை(பெயர்களை) ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி, அஷ்ட ஐஸ்வர்யம், பொன், பொருள், தனதானியம், ஆரோக்கியம், நல்ல குடும்பம், குழந்தைகள், நல்ல புகழ், வாகனவசதி, வாழ்வில் ராஜயோகம் கைகூடும். பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம்,” என்றார். அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை. எல்லாரும், காலையில் நீராடியவுடனும், மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.

ஓம் கேசவாய நமஹ:
ஓம் சங்கர்ஷணாய நமஹ:
ஓம் நாராயணாய நமஹ:
ஓம் வாசுதேவாய நமஹ:
ஓம் மாதவாய நமஹ:
ஓம் ப்ரத்யும்னாய நமஹ:
ஓம் கோவிந்தாய நமஹ:
ஓம் அநிருத்தாய நமஹ:
ஓம் விஷ்ணவே நமஹ:
ஓம் புருஷோத்தமாய நமஹ:
ஓம் மதுசூதனாய நமஹ:
ஓம் அதோக்ஷஜாய நமஹ:
ஓம் திரிவிக்ரமாய நமஹ:
ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ:
ஓம் வாமனாய நமஹ:
ஓம் அச்சுதாய நமஹ:
ஓம் ஸ்ரீதராய நமஹ:
ஓம் ஜனார்தனாய நமஹ:
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ:
ஓம் உபேந்த்ராய நமஹ:
ஓம் பத்மநாபாய நமஹ:
ஓம் ஹரயே நமஹ:
ஓம் தாமோதராய நமஹ:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ:

தினமும் இந்த மந்திரங்களை ஜபிக்கும்போது, துளசியும், சுத்தமான நீரும் நைவேத்யமாக வைத்து வழிபட்டால் போதும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar