வேலாயுதம்பாளையம்: ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில், நேற்று அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தேன், குங்குமம், திருமஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. இப்பூஜையில் பெண்கள் நேர்த்திக்கடனாக கூழ் தயார் செய்தும், மஞ்சள், குங்குமம், வளையல், புடவை உள்ளிட்டவற்றுடன், ஆபரணங்களையும் வைத்து அம்மனுக்கு படைத்தனர். பின் பெண்களுக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டன. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.