காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கருட பஞ்சமி நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது. நிகழாண்டு 31-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் காரைக்காலுக்கு எழுந்தருள்வர். காலை 10 மணியளவில் பெருமாள்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படும். மாலை 6 மணியளவில் அம்மையார் குளக்கரையில் கருட சேவை நடைபெறவுள்ளது. தொடர்ந்து வீதியுலா நடைபெறும்.மேலும் ஜூலை 26-ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சியும், 30-ம் தேதி ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள், ஆண்டாள் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி ஆர். மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.