கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திக்கையை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிவகாமி அம்மனுக்கும் சிதம்பரேஸ்வரருக்கும் மஞ்சள் காப்பு அலங்காரம், வள்ளி தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து சந்தகாப்பு அலங்காரம் நடந்தது. அம்பிகேஸ்வர குருக்கள் பூஜை களை செய்து வைத்தார். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலையில் தண்டபாணிக்கும், மாலையில் வள்ளி தெய்வானை முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.