பவிஷ்யோத்ர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷாசலம், வேங்கடாசலம் என்று நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் மேலும் 14 பெயர்களைச் சொல்கிறது.
இஷ்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதனால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயராயிற்று.
ஞானத்தைக் கொடுப்பதால் ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சான்னித்யதைக் கொண்டிருப்பதால் தீர்த்தாசலம்.